இன்று சரியாக 2,30 மணியளவில் சாய்ந்தமருது SEA BREEZE முன்பாக மோட்டார் பைசிகளில் மோதுண்டு சிறுமி ஒருவர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது
சாய்ந்தமருது SEA BREEZE உணவகத்தில் இருந்து வெளியில் வந்து வீதியினை கடக்க முற்பட்டவேளை வீதியால் வந்த மோட்டார் பைசிகள் இந்த சிறுமி மீது மோதுண்டுள்ளது
விபத்துக்குள்ளான இடத்தில் இருந்து உடனடியாக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது சிறுமிக்கு தகுந்த சிகிச்சை வழங்கப்பட்டுவருகின்றது,
விபத்து பற்றிய மேலதிக விசாரனைகளை கல்முனை போலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த சிறுமிக்காக அனைவரும் இறைவனிடம் துஆ செய்யுங்கள்.