இலங்கையின் தற்கால அரசியலில் பேசுப்பொருளாக மாறியிருக்கின்ற விடயமே இனவாதம் என்கின்ற சொல்லாடலாகும். அவ்வகையில் இன்று இவ்வினவாதம் என்ற கருப்பொருளை கையாளுகின்ற கதாநாயகர்களான அரசியவாதிகளையும் தாண்டி சில மதத்தினை போதிக்கின்ற மதகுருமார்கள் முன்னின்று செயற்படுகின்றமை மேலும் இவ்விடயம் தொடர்பான வாதப்பிரதிவாதங்களை கிளப்பிவிட்டிருக்கின்றது.
உண்மையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்ற மாபெரும் மக்கள் இயக்கமும் இனவாதத்தினை அடிப்படையாக கொண்டு இனப்பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முஸ்லிம் அரசியலினை காலூண்டச்செய்து முஸ்லிம்களுக்கான தனியொரு அடையாளமாக திகழ வேண்டும் என்ற நோக்கில் உருவாக்கப்பட்ட சொத்தாகும். அதனடிப்படையில் இன்றுவரை உருவாக்கப்பட்ட நோக்கத்திற்காக விமர்சனங்களையும் பிளவுகளையும் தாண்டி சுழன்றுகொண்டுதான் இருக்கிறது. சுழன்று கொண்டு இருக்கத்தான் போகிறது இன்ஷா அல்லாஹ்.
அவ்வகையில் கேள்வி எழ முடியும் மதகுருமார் பேசினால் என்ன? அரசியல் கட்சி பேசினால் என்ன? எல்லாம் இனவாதம் தானே என்ற? உண்மையில் மற்றையவர்கள் பேசுகின்ற இனவாதத்திற்கும் ஸ்ரீ-லங்கா முஸ்லிம் காங்ரஸ் பேசுகின்ற இனவாதத்திற்கும் பாரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு போதும் முஸ்லிம் காங்ரசின் தலைமையோ உறுப்பினர்களோ இன்னொரு இனத்தினை அவமதித்து பேசியதில்லை, இன்னொரு இனம் பெறவேண்டிய ஒன்றை தட்டிப்பறித்ததும் இல்லை, இன்னொரு மதஸ்தலத்தில் கைவைத்ததும் இல்லை, மத சுதந்திரத்தில் தலையிட்டதும் இல்லை, இன்னொரு இனம் வாழக்கூடாது என நினைத்ததும் இல்லை, நாட்டின் கொள்கையினை மீறி வேறெந்த நாட்டோடு அல்லது அமைப்போடு தொடர்பினை பேனியதும் இல்லை.
மாறக இன்றைய காலகட்டத்தில் ஒருமதத்தவரால் இன்னொரு மதத்தவரின் உரிமைகளுக்கெதிரான கோஷம் எழுப்பப்படுகின்றது. ஒரு இனத்தினது அடையாளத்தினை அழிப்பதற்கான நாடகம் அரங்கேற்றப்படுகின்றது. இன்நிலைப்பாட்டையே தவறானதாக நாம் பார்கின்றோம். தமிழர் ஆனாலும் சிங்களவரானாலும் உங்களது மத, இன, பொருளாதார நலன்களை பாதுகாப்பதற்கான உரிமை உமக்கிருக்கிறது என்றுதான் சொல்லுகின்றோம்.
முஸ்லிம் காங்ரஸின் ஸ்தாபகர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் தன் இனத்திற்காக மட்டுமன்றி சகோதர இனமான தமிழினத்துக்காகவும் குரல் கொடுத்தவர். தமிழர்களுக்கான சுயநிர்ணய உரிமையை அண்ணண் பிரபாகரன் பெற்றுத்தராவிடின் தம்பி அஷ்ரப் பெற்றுத்தருவான் என சபதம் எடுத்தவர். அப்பாசறையில் வளர்க்கப்பட்ட தற்கால தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் முஸ்லிம்களின் உரிமையினை பற்றிப் பேசுவதும் வர இருக்கின்ற யாப்புத்திருத்தத்தில் முஸ்லிம்கள் சார்பான கொள்கையினை முன்வைப்பதும் இனவாதமாக பார்கப்படுமானால் அதற்காக நாம் குற்றவாளியாக முடியாது என்பதினை இவ்விடத்தில் கவனத்தில் கொள்ளவேண்டியது கடமையாகும்.
மேலும பண மழைக்கு முளைத்த சில காலான்கள் இன்று முஸ்லிம் இனத்தின் உரிமைக்காக போராடுவதாக கூறிக்கொண்டு வீராப்பு பேசி தேசிய தலைவராக கனவு காணுகிறார்கள். பாவம் அவர்கள் பணப்பசி தீர்ந்தவுடன் சில்லுகழன்ற வாகனம் போல் சிதறடிக்கப்பட இருக்கிறார்கள். இலங்கை வாழ் முஸ்லிம்களின் உரிமை என்ற கனியினை முஸ்லிம் காங்ரஸ் என்ற மரம் தான் பெற்றெடுக்கும் என்ற உறுதிமொழியோடு விடைபெறுகிறேன்.
(-Sifas Nazar BA, READING LLB)