கேரள
மாநிலம் ஆலப்புழாவில் நடந்த திருமணத்திற்கு சவுதியில் இருந்த மணமகன்
வரமுடியாததால் அவரது சகோதரி மணமகளுக்கு தாலி கட்டியுள்ளது பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

கொல்லம்
அருகே வெளியம் பகுதியைச் சேர்ந்தவர் பாரிஸ்(28). இவர் சவுதியில் இருந்து
வருவதில் சிக்கல் ஏற்பட்டது. இவர் பணிபுரிந்த நிறுவனத்தின் மீது சில
புகார்கள் அரசுக்கு சென்றதால் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த அனைத்து
வெளிநாட்டு ஊழியர்களது விசா மற்றும் பாஸ்போர்ட்டை அதிகாரிகள் பறிமுதல்
செய்திருந்தனர்.
இதனால்
பாரிசுக்கு ஊருக்கு வரமுடியவில்லை. பின்னர் தனது நண்பர்களை தொடர்பு கொண்ட
பாரிசு, தான் திருமணத்திற்கு வர இயலாது என தெரிவித்தார்.