சவூதி அரேபியாவில் துப்பரவுத் தொழிலாளியாக கடமை புரியும் பங்களாதேஷ் நாட்டைச் சோ்ந்த ஒருவா் தங்க நகைகள், ஸ்மாட் போன்கள் போன்றவை அன்பளிப்பாக வழங்கிய சம்பவம் இன்று இனையத்தில் பரவி வருகின்றது.
இது தொடா்பாக அறிய வருவதாவது,
பாதையை சுத்தம் செய்யும் தொழிலாளி ஒருவர் ஏக்கத்துடன் நகை கடை கண்ணாடி வழியாக நெக்லஸ் ஒன்றை பார்த்து கொண்டு நின்றதை ஒரு படம் பிடித்து TWITTER சமூக வலைதளத்தில் “this man deserves to only look at rubbish.” இந்த மனிதா் குப்பை பெறுக்க மட்டும் தான் தகுதியானவா். என்று கீழ்தரமாக கருத்துக்களைப் பதிந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் மிகவும் வைரலாக பரவியது.
இதனைப் பார்த்த ஒரு நல் உள்ளம் கொண்டவா் அவரைத் தேடிக் கண்டு பிடித்து அவருக்கு அவா்கள் விரும்பி அந்த நெக்லஸ் உட்பட இன்னும் பரிசுப் பொருட்கள் வழங்கிய உள்ளமை அனைவரினதும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மேற்படி மேற்படி பரிசுகள் வழங்கப்பட்ட நபா் பெயா் ”நஸ்ருல் அப்துல் கரீம்” என்னும் பங்களாதேஷ் ஏழை பிரஜையாவார். அவா் மாதச் சம்பளம் 700 றியால் பெறும் துப்பரவுத் தொழிலாளியாக கடமை புரிகின்றார்கள்.
அவருக்கும் பரிசுப் பொருட்களாக அவா் விரும்பிய அந்த
- தங்க நெக்லஸ்
- அரிசி மூட்டைகள்
- தேன் போத்தல்கள்
- இருவழி விமான டிக்கட்டுக்கள்
- ஐபோன் 7
- சம்சுங்க கலக்சி போன்
- மற்றும்
- பணம் (தொகை அறியப்படாதது).
போன்றவை வழங்கப்பட்டுள்ளன.
அரபிய டிவிகளில் ஒளிபரப்பாகிறது கடைக்காரரே டிவிக்களை அழைத்து பேட்டி கொடுத்துள்ளார் உதவியர் தன் பெயரை சொல்லாமல் தன் முகத்தை மீடியாக்களுக்கு காட்டாமல் சென்று விட்டார் அந்த நல்ல மனிதா்.
ஆங்கிலத்தில் : அரேபியா.நெட்
தமிழில் : QATAR தமிழ் போய்ஸ்
![]() |
அன்பளிப்புக்கள் வழங்க உதவிய படம் இதுதான்.!! |