Friday, December 9, 2016

பர்தா அணியத் தடைவிதித்த குருநாகல் மாவட்டப் பாடசாலைகளுக்கு ரிஸ்வி ஜவஹர்ஷா மூலம் தீர்வு

(-ரிம்சி ஜலீல்-) குளியாப்பிட்டிய கல்வி வலயத்திற்குற்பட்ட கடுகம்பல தொகுதி அலபடகம அல் அமீன் மத்தியஅந்த முஸ்லிம் மாணவிகள் பர்தா அணிந்துகொண்டு பரீட்சை எழுதுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளமை பெற்றோர்கள் மத்தியில் கடும்
விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விடையம் தொடர்பில் அலபடகம ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினரான பௌசுல் அமீர் அவர்கள் மற்றும் அல் அமீன் மத்திய கல்லூரியின் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் அலபடகம கல்வி அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மூலம் வடமேல் மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் கவனத்திற்க்குக் கொண்டுவரப்பட்டது.


இதனையடுத்து வடமேல் மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்கள் மூலம் கிரியுள்ள கல்வி வலயப்  பணிப்பாளர் திருமதி ஜேந்திலா மடம் அவர்களின் கவனத்திற்க்குக்
கொண்டுவரப்பட்டது.

இந்த விடயம் தொடர்பில் உடனடியா செயற்பட்ட கிரியுள்ள கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி ஜேந்திலா மடம் அவர்கள் இன்று காலை உரிய பாடசாலைக்குச் சென்று விடையங்களை சுமூகமான முறையில் தீர்த்து வைத்துள்ளார்.

மேலும் இது போன்ற சம்பவங்கள் குளியாப்பிட்டிய கல்வி வலயத்திற்குற்பட்ட நாரம்மலை, பொல்கஹயாய பென்தனிகொட மடிகே மிதியால பண்டாரகொஸ்வத்த போன்ற பகுதிகளிலும் இடம்பெற்று வடமேல் மாகாணசபை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சட்டத்தரனி ரிஸ்வி ஜவஹர்ஷா அவர்கள் மூலம் சுமூகமான முறையில்  தீர்த்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Disqus Comments