பாகிஸ்தான் எயார்லைன்ஸ் PK-661 விமானம், இஸ்லாமபாத் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் விபத்திற்குள்ளாகியுள்ளது.
சித்ரால் பகுதியிலிருந்து 47 பயணிகளுடன் இஸ்லாமபாத் நோக்கிப் பயணித்த போதே விபத்து இடம்பெற்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹவ்லியன் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, ராடார் கண்காணிப்பிலிருந்து விமானம் விடுபட்டு, காணாமற்போயிருந்ததாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சித்ராலில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம், பிற்பகல் 4.30 அளவில் தொடர்புகளை இழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹவ்லியன் மலைப்பகுதியில் விமானம் விபத்திற்குள்ளாகி புகைமூட்டம் காணப்பட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்பட்டுள்ளது.