இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவுசெய்துகொண்டு தொழில்வாய்ப்புக் கருதி வெளிநாடு சென்றுள்ள பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ், 2017 ஆம் ஆண்டிற்கான விண்ணப்பங்கள் பின்வரும் தகைமைகளையுடைய மாணவ மாணவிகளிடமிருந்து கோரப்படுகின்றன.
தகைமைகள்
அ) 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில்
1) தாய்/தந்தை 2010.08.21 இற்கும் 2016.08.21 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்திருத்தல்.
2) 2016 ஆம் ஆண்டு 5 ஆம் ஆண்டு புலமைப் பரீட்சையில் மாவட்ட வெட்டுப்புள்ளியில் சித்தியடைந்து இருத்தல்.
ஆ) க.பொ.த (சா/த) புலமைப்பரிசில்
1) தாய்/தந்தை 2010.12.08 இற்கும் 2015.12.08 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்திருத்தல்.
2) 2015 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சையில் கணிதம், உள்ளிட்ட 6 பாடங்களுடன் 3 திறமைச்சித்தியுடன், ஒரே தடவையில்
சித்தியடைந்து உயர் தரம் கற்பவராக இருத்தல்.
இ) உயர்கல்வி புலமைப்பரிசில்
1) தாய்/தந்தை 2010.08.04 இற்கும் 2015.08.04 இற்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் பணியகத்தில் பதிவுசெய்திருத்தல்.
2) 2015 ஆம் ஆண்டு உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்து தற்போது அரச பல்கழைக்கழகம் ஒன்றில் முழுநேர உள்வாரி
பட்டப்படிப்பு முதல் வருடத்தில் கற்பவராக இருத்தல்
மேற்படி தகைமைகளையுடைய விண்ணப்பத்தாரர்கள் குறிப்பிட்ட விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ஆவணங்களுடன் பதிவுத்தபால் மூலம் 2017.04.30 ஆம் திகதிற்கு முன் கீழ் காணும் விலாசத்திற்கு அனுப்பி வைத்தல் வேண்டும். விண்ணப்பம் அனுப்பி வைக்கும்போது கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் “புலமைப்பரிசில் வழங்கல் -ஆண்டு-5 / க.பொ.த.(சா.த) /உயர்தரம் 2017” எனகுறிப்பிடுதல் வேண்டும் (இதில் தனக்கு உரியதை மட்டும் குறிப்பிடுதல் வேண்டும் )
1. மாணவன்/மாணவியின் பிறப்பு அத்தாட்சிப்பத்திரத்தின் பிரதி (அதிபரினாலோ / பதிவாளரினாலோ இறப்பர் முத்திரையிட்டு உறுதிப்படுத்திகையொப்பமிடல் வேண்டும்)
2. மாணவன்/மாணவியின் கல்விப் பெறுபேற்று சான்றிதழின் பிரதி. (அதிபரினாலோ/பதிவாளரினாலோ இறப்பர் முத்திரையிட்டு உறுதிப்படுத்தி கையொப்பமிடல் வேண்டும்)
3. தாய்/தந்தையின் கடவுச்சீட்டின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ள பக்கத்தின் பிரதி.
4. புலமைப்பரிசில் விண்ணப்பதாரரின் அல்லது வெளிநாடு சென்றுள்ள (தாயின் /தந்தையின் ) பெயர்களில் ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் அவைகளை தெளிவுபடுத்தி உறுதிப்படுத்தும் ஆணையாளர் ஒருவரினால் வழங்கப்படும் சத்தியக்கடதாசி.
5. மாணவனின்/மாணவியின் தேசிய அடையாள அட்டையின் பிரதி (க.பொ.த (சா.த) மற்றும் உயர்தரம் கற்பவர்களுக்கு கட்டாயமாகும்.
6. க.பொ.த.(சா.த), புலமைப்பரிசில் விண்ணப்பதாரர் தான் தற்பொழுது பாடசாலையொன்றில் /பிரிவெனாவொன்றில்/ வேறு அனுமதிபெற்ற நிறுவனமொன்றில் உயர்கல்வி பயிலுகின்றவர் என அதிபரினால் / பிரிவெனா தலைவரினால் /நிறுவன உயரதிகாரியினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட கடிதம் (இறப்பர் முத்திரையிட்ட மூலப்பிரதி கட்டாயமாகும்).
மிக முக்கியமானது
மிக முக்கியமானது
- விண்ணப்பப்பத்திரத்தின் 3 ஆம் பகுதி அதிபரினால்/பிரிவு தலைவரினால் / நிறுவன உயரதிகாரியினால் /பதிவாளரினால் பூரணப்படுத்தி இறப்பர் முத்திரையிட்டு உறுதிப்படுத்தல் வேண்டும்.
- ஒரு புலமைப்பரிசிலைப் பெறுவதற்கு ஒரு தடவை மாத்திரமே விண்ணப்பிக்க முடியும்.
- விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 2017.04.30 ஆகும்
மேற்குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத அல்லது உரிய ஆவணங்களின் பிரதிகள் இணைக்கப்படாத அல்லது பூரணமாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் காலதாமதமாகி கிடைக்கப் பெறுகின்றவிண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய விலாசம் :-
முகாமையாளர் (நலன்புரி)
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்
இல.234 டென்சில் கொப்பேகடுவ,
கொஸ்வத்த,
பத்தரமுல்லை.
தொலைபேசி இல:- 011-2864117
தலைவர்
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்