Wednesday, January 11, 2017

மாகொல முஸ்லிம் அநாதை இல்லத்துக்கு 2017ம் ஆண்டுக்கு அநாதை மாணவர்களைச் சேர்த்தல்

மாகொல முஸ்லிம் அநாதை நிலையத்தின் கீழ் இயங்கி வரும் மாகொலையில் அமைந்துள்ள அன்வாருல் உலூம் அறபுக் கல்லூரி மற்றும் மல்வானையில் அமைந்துள்ள யதாமா பாடசாலை ஆகிய இரு இடங்களுக்கும் புதிய மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர்.



தந்தை மரணித்த 6 முதல் 12 வயதிற்கிடைப்பட்ட அநாதை சிறார்கள் விண்ணப்பிக்க முடியும்.

இன்ஷா அல்லாஹ் இம்மாதம் 2017.01.19 ஆம் திகதி வியாழக்கிழமை புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்hன நேர்முகப்பரீட்சை மாகொல முஸ்லிம் அநாதை நிலைய வளாகத்தில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே எமது நிலையத்தில் சேர்ந்து கொள்ள விரும்புவோர் நேர்முகப்பரீட்சை நடைப்பெறும் அத்தினத்தில் நேரடியாக வந்து கலந்து கொள்ள முடியும்.

நேர்முகப்பரீட்சைக்கு தோற்றுவோர் பிள்ளையின் பிறப்பத்தாட்சிப்பத்திரம் , தந்தையின் மரண அத்தாட்சிப்பத்திரம் ஆகிய இரண்டையும் சமர்ப்பிக்க வேண்டும்.

எமது நிலையத்தில் சேர்த்துக்கொள்ளப்படும் அனைத்து அநாதை சிறார்களுக்கும் உணவு, உடை, தங்குமிட வசதி மற்றும் கல்வி, மருத்துவம் அனைத்தும் இலவசமாக வழங்கப்படும்.

Ramees Hussain (Anvary)




Disqus Comments