கட்டாரில் போலிச் சான்றிதழுடன் வந்த ஜோர்தான் நாட்டவருக்கு கட்டார் குற்றவியல் நீதிமன்றம் மூன்று வருட சிறைத் தண்டனையை வழங்கியுள்ளது.
மேற்படி ஜோர்தான் நாட்டவர் தனது சான்றிதழ் எனக் கூறி உறுதிப்படுத்தும் நோக்கில் கட்டார் வெளி விவகார அமைச்சுக்கு ஐந்து சான்றிதழ்களை வழங்கி இருந்தார்.
அவற்றில் இரண்டு சான்றிதழ்கள் போலியானவை என கண்டு பிடிக்கப்பட்டு குற்றம் உறுதிப்படுத்தப்பட்டமையால் அவருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையை டோஹா குற்றவியல் நீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது.
போலிச் சான்றிதழ் என்று கண்டுபிடிக்கப்பட்டது PHD சான்றிதழ் ஆகும் என கட்டார் Arrayah செய்தி வெளியிட்டுள்ளது. (உண்மையின் பக்கம்)