கலீபா தேசிய விளையாட்டரங்க கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த 40 வயது மதிக்கத்தக்க நியூஸிலாந்துப் பிரஜை ஒருவர் தவறி விழுந்து பலியாகியுள்ளதாக கட்டார் இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விளையாட்டரங்கின் 60 மீற்றருக்கு மேல் உள்ள வளைவுகளில் சில தொழில் நுட்ப வேலைகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த நபரே தவறுதலாக விழுந்து பலியாகியுள்ளார். இது தொடா்பான அவசர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலியான நபரின் குடும்பத்துக்கு கட்டார் அரசாங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளது.
மேற்படி கலீபா தேசிய விளையாட்டரங்கில தான் அதிகமான போட்டிகள் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளதோடு 2006ம் ஆண்டு ஏசியன் கேம்ஸ் இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் மேற்படி பலியான நபர் இங்கிலாந்தைச் சோ்ந்தவர் என்று செய்திகள் வெளியாகின. என்றாலும் உறுதியான விசாரனைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவர் நியூஸிலாந்தைப் சோ்ந்தவர் என்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

(தமிழில் - உண்மையின் பக்கம்)