Saturday, January 21, 2017

வெளிநாட்டு வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பயிற்சி கட்டாயம்


வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்லும் பெண்கள் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகங்கொடுக்க நேரிடுவது, அவர்களின் அறியாமை காரணமாகவே என்று பிரதியமைச்சர் அனோமா கமகே கூறினார். 

அதன்காரணமாக அவர்களுக்கு சரியான பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார். 

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்கான பயிற்சி நிலையம் ஒன்றை அம்பாறையில் ஆரம்பிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அமைச்சர் இவ்வாறு கூறினார். 

வாழ்வாதாரத்திற்காக பெண்கள் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வதை தான் அனுமதிப்பதில்லை என்ற போதிலும், அதற்கு மாற்றீடு தற்போதைக்கு இல்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். 

அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக அதற்கு பொறுப்பான அமைச்சரினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிவித்தார். 
Disqus Comments