Tuesday, January 17, 2017

முச்சக்கர வண்டி சாரதிகளின் குறை தீர்த்து தீர்வு அளித்த கிழக்கு மாகாண முதலமைச்சர்

முச்சக்கர  வண்டி தரிப்பிடமொன்று  இன்றி  நீண்ட நாட்களாக அல்லலுற்று வந்த  வாகரை பிரதேச முச்சக்கர வண்டி சாரதிகள் பல்வேறு  சிரமங்களுக்கு மத்தியில்  தமது  ஜீவனோபாயத்தை முன்னெடுத்து வந்தனர்,

இந்நிலையில் அண்மையில் அந்தப் பகுதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டிடம்  முச்சக்கர வண்டி சாரதிகள் மகஜரொன்றை கையளித்து தமது  துயரங்களை எடுத்து கூறியிருந்தனர்.

இதனை செவிமடுத்த முதலமைச்சர்  நேற்று ஞாயிற்றுக்கிழமை அவர்கள் இடத்திற்கு சென்று அவர்களுக்கான முச்சக்கரவண்டி தரிப்பிடமொன்றை வழங்கியதுடன் அவர்களின் தொழில்களை கௌரவிக்கும் விதமாக அடையாள அட்டைகளையும் வழங்கி வைத்தார்

இந்த முச்சக்கர வண்டி சாரதிகள் மத்தியில் தமிழ் முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த இரு சாராரும் தொழில்புரிகின்றமை குறிப்பிடத்தக்கது.


Disqus Comments