Sunday, February 12, 2017

சிகிரியா செல்பவர்களுக்கு நற்செய்தி! இனி லிப்ட் மூலம் தரிசிக்கலாம்.!


சிகிரியாவை பார்வையிடச் செல்பவர்களுக்கு வசதியாக லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்களை பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தவுள்ளதாக, அகில விராஜ்காரியவசம் குறிப்பிட்டுள்ளார். 

தொல்பொருட்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

சிகிரியாவுக்கு வரும் வௌிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க, லிப்ட் மற்றும் எலக்ரிக் மோட்டார் வாகனங்கள் அவசியம் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

சிகிரியா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார்.
Disqus Comments