வாகனங்களின் குற்றசெயல்களுக்கான அபராத கட்டணங்கள் திருத்தப்பட்ட பட்டியல் எதிர்வரும் வாரமளவில் வௌியிடப்படவுள்ளது.
முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்து சங்கங்களுக்கு இந்த திருத்தப்பட்ட பட்டியல் கையளிக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் நிஹால் சோமவீர இந்த தகவலை வௌியிட்டுள்ளார்.
போக்குவரத்துத் துறையில் ஏற்பட்ட நெருக்கடியான நிலைமை தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பங்களிப்புடனான கூட்டத்தில் அந்த துறைசார்ந்தவர்களுக்கு அபராத பட்டியல் கையளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், வாகனங்களின் குற்றச்செயல்களுக்காக புதிய அபராத பட்டியலை இறுதி செய்யும் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்துள்ளது.
எவ்வாறாயினும், முச்சக்கரவண்டிகள் மற்றும் பேருந்து சங்கங்களிடம் குறித்த சட்டமுலம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் அவர்களின் யோசனைகளும், பரிந்துரைகளும் கருத்தில் கொள்ளப்படும்.
அதன்படி. குறித்த சட்டமூலத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படும் என நிஹால் சோமவீர தெரிவித்தார்.