கிழக்கு
மாகாண பட்டதாரிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அவசர அமைச்சரவைக்
கூட்டமொன்று கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் இன்று
காலையில் இடம்பெறவுள்ளதாக நம்பத் தகுந்த
வட்டாரங்கள்தெரிவிக்கின்றன.,
திருகோணமலையில் உள்ள
மாகாண சபைக்கட்ட்டத்தில் இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தின்
அனைத்து அமைச்சர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்,
அது மாத்திரமன்றி கிழக்கு மாகாண சபை வராலாற்றில் காலை 8 மணியளவிலேயே அமைச்சரவைக் கூட்டமொன்று கூடும்
முதல் சந்தர்ப்பமாக இது
கருதப்படுகின்றது.
இந்தக்
கூட்டத்தின் போது கிழக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் பிரதமருடனான
சந்திப்பின்போது எடுக்கப்பட்ட பல தீர்மானங்கள் குறித்து
கலந்துரையாடப்படவுள்ளதாக
நம்ப்ப்படுகின்றது ,
இதேவேளை மாகாண ரீதியில் பட்டதாரிகள் தொடர்பில் முக்கிய
தீர்மானங்கள் எட்டப்படலாம் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது