ரெட்பானாவில் அமைந்துள்ள கஜுவத்தை அரசினர் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரை நீக்கக் கூறி ரெட்பானா வாழ் பெற்றோர்களும் பாடசாலை மாணவர்களும் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த திங்கள் முதல் பெற்றோர்கள் பாடசாலைக்கு அனுப்பாது வீட்டிலேயே தங்கச் செய்தனர். கஜுவத்தை முஸ்லிம் அரசினர் வித்தியாலயம் ஆரம்ப்பிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் கடந்துள்ளன. அதாவது 2002.02.02 திகதி இந்த பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. பெரிய பாடசாலைகள் இந்த கிராமத்தில் இருந்து மிகவும் தூரத்தில் அமைந்து காணப்பட்டமையால் தூர பாடசாலை காணப்பட்டதால் இந்த பாடசாலை இந்த ரெட்பானா மக்களின் கல்வித்தேவையை நிறைவு செய்யும் பொருட்டு ஆரம்பிக்கப்பட்டு சிறப்பாக நடை பெற்று வந்தது.
சுமார் கடந்த ஓரிரு ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பாடசாலை 7ம் தரம் வரை நடை பெற்று வந்தது.
இருப்பினும் தற்போது 5ம் தரமாக மாறியுள்ளமை பெற்றோர்ககளையும், நலன் விரும்பிகளையும் மிகவும் கவலையில் ஆழ்தியுள்ளது. அதன் காரணமாக இந்த நிலைமைக்கு பாடசாலையை கொண்டு சென்ற அதிபர் தேவை இல்லை. இவரை உடனடியாக மாற்ற வேண்டும் என்ற முடியுடன் பெற்றார்கள் முக்கியமான அரசியல்வாதிகளைவும், அதிகாரிகளையும் சந்தித்து தமது கோரிக்கைகளை முன் வைத்தனர். என்றாலும் மேல் மட்டத்தில் அரசியல் தலையீடு காரணமாக அதிபரை மாற்றுதல் என்ற விடயம் தாமதமாகியே வந்தது. என்றாலும் இந்த நிலமை நீடித்தால் பாடசாலையை இழுத்து மூட வேண்டிய நிலமை வந்து விடும் என பயந்த பெற்றோர் அனைவரும் பள்ளிவாயால் பரிபாலன சபையுடன் இணைந்து கலந்து ஆலோசித்து திங்கள் கிழமை முதல் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என்றும் தகுந்த, சாதகமான முடிவு கிடைக்கும் வரை இந்த நிலைப்பாட்டில் இருந்தவாறு தகுந்த அதிகரிகளுக்கு இரண்டு நாள் அவகாசம் வழங்கி இருந்தனர். இருந்தும் எந்த விதமான சாதகமான முடிவும் கிடைக்கமையினால் இன்று தமது பிள்ளைகளுடன் வந்து பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

- தகுதியற்ற அதிபரை மாற்றி வேறு அதிபரை நியமி
- ஊழல் அதிபர் ஒலிக
- எங்கள் கல்வியை பாழாக்காதே