Monday, April 2, 2012

வாகனங்களுக்கான இறக்குமதி வரிகள் தாறுமாறாக அதிகரிப்பு


வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும்  வாகனங்களுக்கான இறக்குமதி வரிகள் அரசாங்கத்தினால் தாறுமாறாக  கடந்த 31 .03 .2012  அன்று முதல் அமூலுக்கு வரும் வகையில்  அதிகரிக்கப்பட்டுள்ளன.



வாகனங்களோடு சேர்த்து  உதிரிப்பாகங்ககலுக்கான  விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
மேற்படி நடவடிக்கை யின்  காரணமாக வரிகள் அதிகரிக்கப்பட்ட வாகனங்களவான

  1. எல்லாவகையான கார்கள்
  2. வேன் கள்
  3. முச்சக்கர வண்டிகள்
  4. மோட்டார்  வண்டிகள் 
என்றாலும் விவசாயத்திக்காக  பயன் படுத்தும் உளவு இயந்திரங்கள், லொறிகள். பஸ்கள் மற்றும்  போன்றவற்றுக்கான வரிகளில் எந்த வித மாற்றமும் இல்லை என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுவும் எத்தனை நாளைக்கு என்பதுவும் கேள்விக் குறியான விடயமாகவே உள்ளது.
  • பெட்ரோல் காரின்  வரி  65 - 125% யில் இருந்து 200 - 275% க்கு      அதிகரிக்க பட்டுள்ளது (என்ஜின் தரத்திக்கு ஏற்ப மாற்றமுண்டு )
  • டீஸல்  காரின்  வரி  180% to 250% யில்  இருந்து  291% to 350% க்கு  மாற்றப்பட்டுள்ளது (என்ஜின் தரத்திக்கு ஏற்ப மாற்றமுண்டு )
  • பெட்ரோல் வானின்  வரி 103 - 172% யில் இருந்து  125 - 200% க்கு   அதிகரிக்க பட்டுள்ளது (பயணிப்பவர்களின் எண்ணிக்கை கவனத்தில் கொள்ளப்படும்)
  • டீஸல்   வானின் வரி  112 - 291% யில் இருந்து  125 - 350% க்கு   அதிகரிக்க பட்டுள்ளது
  • பெட்ரோல்  மற்றும் டீசல் முச்சக்கர வண்டிகளின் வரிகள்  முறையே 51% மற்றும் 61%  க்கு   அதிகரிக்க பட்டுள்ளது
  • மோட்டார் வண்டிகளின் வரி   61%யில் இருந்து 100%. க்கு  அதிகரிக்க பட்டுள்ளது 
ஆக இனி மக்கள் வாகனம் கொள்வனவு செய்வது மிகுந்த சவாலான ஒரு விடயமாகவே இருக்கும். என்றாலும் மேற்படி விலை அதிகரிப்பதற்காகன எந்தவிதமான நியாயமான கரணங்களும் முன்வைக்கப்படவில்லை.

     
Disqus Comments