Sunday, April 8, 2012

Opera Mini யில் தமிழ் font ஐ வாசிப்பது எவ்வாறு ?

இன்று நாம் நினைத்து பார்க்காத அளவுக்கு தொலைபேசி தொழில்  நுட்பம் வளர்ந்துள்ளதை கணமுடியும். அந்த வகையில் பார்க்கும் போது நாங்கள் இப்போது 4G எனும் பரிமாணத்தில் கால்பதிக்க இருக்கும் இந்த நேரத்தில் 3G எனும் தொழில்  நுட்பம் பரவலாக பயன்படுத்தப்படுவதை  அவதனிக்கலாம். இன்று சந்தையில் 3G  தொழில் நுட்பத்துடன் கூடிய  மொபைல் களை சந்தைப்படுத்துவதில்  ஃபோன் உற்பத்தியாளர்கள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த   தொழில்  நுட்பம் பலவிதமானபிரயோசனங்களை வழங்குகின்றது. அதில் மிக முக்கியமானது தான் அதிவேக இணையப்பவனையாகும்.

என்னதான் வேகமான இணைய இணைப்பு இருந்தாலும் ஃபோன் என்று வரும் போது அங்கு Opera Mini தான் சிறந்த Browser ஆக திகழ்வதை காண முடியும்.  இந்த Browser ஐ பாவித்து நாம் தமிழ் website களை பார்க்கும் போது அங்கு எமக்கு ஒருவகையான  பெட்டிகளையே  கணமுடியும். இந்த குறையை எப்படி நிவர்த்தி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம்.
 
உங்களுடைய Opera Mini யை  திறந்து address பாரில் பின்வருமாறு type செய்யவும்.

 
1) opera:config
அப்போது சிலவகையான தேர்வுகளை எமக்கு காண முடியும். 
பின்னர் கீழ் வரும் option  ஐ கண்டுபிடிக்கவும். 
2) Use bitmap fonts for complex scripts.
பின்பு அங்கு Value  No இருப்பதைYes என மாற்றிக் கொள்ளுங்கள்.
பின்பு Save செய்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் இனி தமிழ் Font களை உங்களது Opera  Mini யில்   வாசிக்க முடியும்.


Disqus Comments