கொள்ளைகளில் ஈடுபட்ட குற்றத்திற்காக 2 வருடம் சிறைச்சாலையில் இருந்து விடுதலையாகி மூன்றாவது நாள் நள்ளிரவில் வீடு ஒன்றில் கொள்ளையடித்த 20 வயதுடைய இளைஞரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவம் சனிக்கிழமை நள்ளிரவு அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவில் உள்ள விநாயகபுரம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்தனர்.
விநாயகபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த இரண்டு வருட ங்களுக்கு முன்னர் திருக்கோவில் பிரதேசத்தில் மடிகணினி மற்றும் பெறுமதியான பொரு ட்கள் கொள்ளையிட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியபோது இவருக்கு 2 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இச்சிறைத்தண்டனை முடிவுற்று சிறையில் இருந்து வெளியில் வந்து 3 ஆவது நாளான சனிக்கிழமை நள்ளிரவு 12.00 மணியளவில் விநாயகபுரம் பிரதேசத்தில் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையிட முயற்சித்தபோது வீட்டின் உரிமையாளர் கொள்யைனைக் கண்டு சத்த மிட்டதையடுத்து அயலவர்கள் ஒன்று திரண்டு நபரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்து பொலிசாரிடம் ஒப்படைத்தனர்.
இதேவேளைஇ தம்பிலுவில் பிரதேசத்தில் கஞ்சா போதைப் பொருளுடன் ஒருவரை சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாகவும் இவரிடத்தில் இருந்து 2 மில்லிகிராம் கஞ்சா கைப்பற்றியுள்ளதாகவும் இவ்விரு வெவ்வேறு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு ள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவி த்தனர்