Saturday, June 14, 2014

பாலித்த ரங்க பண்டார பயணித்த வாகனம் மாடு ஒன்றில் மோதி விபத்து

ஐக்கிய தேசிய கட்சியின், புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார பயணித்த கெப் ரக வாகனம் புத்தளம் - குருநாகல் வீதியின் 6ஆம் கட்டை பிரதேசத்தில் நேற்று(13) விபத்துக்குள்ளாகியுள்ளது.

வீதியின் குறுக்காக சென்ற மாடொன்று லொறி ஒன்றில் மோதியதை அடுத்து, குறித்த லொறி நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும் இந்த விபத்தில், நாடாளுமன்ற உறுப்பினருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என புத்தளம் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்



Disqus Comments