Saturday, June 14, 2014

மஞ்சள் கோட்டு கட­வையில் விபத்து: பெண் பலி

மஞ்சள் கோட்டுக் கட­வையில் இடம்­பெற்ற விபத்­தொன்றில் பெண் ஒருவர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக சாலி­ய­வெவ பொலஸார் தெரி­வித்­தனர். புத்­தளம் – அநு­ரா­த­புரம் வீதியில் 17ஆம் கட்டை அளுத்­கம பிர­தே­சத்தில் இடம்­பெற்­ற இவ்­வி­பத்தில் இஹலபுளி­யங்­குளம் பிர­தே­சத்தைச் சேர்ந்த டி. எம். விம­லா­வதி (வயது 70) என்ற வயோ­திபப் பெண்ணே இவ்­வாறு உயி­ரி­ழந்­த­வ­ராவார்.
 
உயி­ரி­ழந்த பெண் அளுத்­கம பிர­தேச மருந்­த­கத்திற்கு வைத்­திய சிகிச்­சைக்காக செல்வதற்கு குறித்த வீதியின் மஞ்சள் கோட்டை கடக்க முற்­பட்­டுள்ளார்.
 
அவ்­வேளை புத்­தளம் – அநு­ரா­த­புரம் வீதி வழியாக வேக­மாக வந்த கார் இப்பெண் மீது மோதி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்­தனர்.
 
இவ்­வி­பத்தில் குறித்த பெண் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­துள்­ள­துடன் அப்­பெண்ணின் உடல் பிரேத பரி­சோ­த­னைக்­காக புத்­தளம் வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச்செல்­லப்­பட்­டது.
 
விபத்­துடன் தொடர்­பு­டைய காரின் சாரதி சாலி­ய­வெவ பொலி­ஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments