Thursday, August 28, 2014

வரட்சியின் காரணமாக 14 மாவட்டங்களில் 20 இலட்சம் மக்கள் பாதிப்பு

நாட்டில் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை 20 இலட்சத்தை தாண்டியுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

வரட்சியினால் 14 மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிடுகின்றார்.

ஆயினும் சில பிரதேசங்களில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ள போதிலும், இடர் முகாமைத்துவ அமைச்சின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொடிப்பிலி கூறினார்.

வரட்சியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான குடிநீரை விநியோகிக்கும் நடவடிக்கைகளுக்கு பிரதேச செயலாளர்களின் உதவி பெறப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
Disqus Comments