உதைபந்தாட்ட போட்டியொன்றில் பங்கு கொண்டு திடீரென மயங்கி விழுந்த
நபரொருவர் பதுளைப் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது சிகிச்சை
பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஹாலி-எல பிரதேச சபை விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற உதைபந்தாட்டப்
போட்டியொன்றின் போது இவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பதுளை பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
ஹாலி-எல உணுகொல்ல தோட்டத்தைச் சேர்ந்த சிவனேஸ்வரன் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பதுளைப் பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேதப்
பரிசோதனையையடுத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும்
தெரிவித்துள்ளனர்.
