Saturday, October 15, 2016

தேசிய அரசாங்கத்தில் பிளவுகளோ, சீர்குலைவுகளோ ஏற்படவில்லை - கபீா் ஹாஷிம்

தேசிய அரசாங்கத்தில் பிளவுகளோ, சீர்குலைவுகளோ ஏற்படவில்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாஷிம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அண்மையில் வெளியிட்ட கூற்றுக்கு தவறாக விளக்கமளிக்க வங்குரோத்து அரசியல் குழுவொன்று முயன்று வருவதாகவும் அமைச்சர் கபீர் ஹாஷிம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
 
வரலாற்றுச் சிறப்புமிக்க கேகாலை ரஜமஹா விஹாரை வளாகத்தில் ஊடகவியலாளர்கள் மத்தியில் அமைச்சர் கருத்து தெரிவிக்கையிலேயே இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
 
சட்டவாட்சியை உறுதிப்படுத்தி நியாயமான நேர்மையான சமூகத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் இலக்காகுமென்று தெரிவத்த அவர் இராணுவ வீரர்கள் பற்றி இன்று கருத்து வெளியிடும் விமல் வீரவன்ஷ, மஹிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள், சரத் பொன்சேகா பலவந்தமான முறையில சிறைக்கு இழுத்துச் செல்லப்பட்ட போது ஏன் மௌனம் சாதித்தார்கள் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். 
 
அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இங்கு கருத்து தெரிவிக்கையில் யுத்தத்திற்கு முடிவு கட்ட உதவிய மூன்று கடற்படை தளபதிகளையும் முன்னாள் பாதுகாப்பு செயலாளரையும் ஒரே தடவையில் சிறைப்படுத்துவதன் மூலம் மக்களுக்கு மத்தியில் சுமூகமற்ற நிலை தோன்றலாம் 19வது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய ஸ்தாபிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் மூலம் இந்த விடயம் மேற்கொள்ளப்பட்டாலும் சமூகத்தின் உணர்வுபூர்வமான விடயங்கள் தொடர்பில் தமக்கோ, பிரதமருக்கோ அறிவிக்குமாறு ஜனாதிபதி கேட்டிருந்ததாகவும் அமைச்சர் கூறினார்
Disqus Comments