Friday, November 21, 2014

யார் இந்த மைத்தரிபால சிரிசேன வாழ்க்கை வரலாறு தொகுப்பு

மைத்திரிபால சிரிசேன பிறப்பு: 3 செப்டம்பர் 1951 இலங்கை சிங்கள அரசியல்வாதி ஆவார். 1979 ஆம் ஆண்டில் அரசியலில் நுழைந்த இவர் 1989 முதல் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். 1994 முதல் இலங்கை அமைச்சரவையில் பல பொறுப்புகளை வகித்து வருகிறார். இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் உள்ளார். 2008 ஆம் ஆண்டில் இவர் மீது நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் காயமெதுவும் இன்றி உயிர் தப்பினார்.
1951 இல் பிறந்த இவர் பொலன்னறுவை ரோயல் கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர் குண்டசாலை விவசாயக் கல்லூரியில் படித்து 1973 ஆம் ஆண்டில் டிப்புளோமா பட்டம் பெற்றார். 1971 ஜேவிபி புரட்சியின் போது இவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.1980 இல் இவர் உருசியாவின் மாக்சிம் கல்விக்கழகத்தில் அரசியல் அறிவியலில் டிப்புளோமா பட்டம் பெற்றார்.
1979 ஆம் ஆண்டில் சிரிசேன இலங்கை சுதந்திரக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் மாவட்ட செயலாளராகப் பணியாற்றினார். பின்னர் இலங்கை சுதந்திரக் கட்சியின் இளைஞர் அமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1989 ஆம் ஆண்டில், பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற சென்றார். 1994 தேர்தலில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்தார். இதன் பின்னர் இவர் மகாவலி அபிவிருத்தித் துறை பிரதி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2008 அக்டோபர் 9 இல் கொழும்பின் புறநகரான பிலியந்தலையில் சிறிசேன சென்ற வாகன அணித் தொடர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படுபவர்களால் தற்கொலைத் தாக்குதல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அமைச்சர் சென்ற வாகனம் தாக்குதலில் இருந்து தப்பியது. ஆனாலும் ஒருவர் கொல்லப்பட்டு மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.
வாழ்க்கைத் துணை ஜெயந்தி புஷ்பகுமாரி
பிள்ளைகள் 2 மகள்கள், ஒரு மகன்

மகாவலி அபிவிருத்தி அமைச்சர்
பதவியில் 2000 – 2001

வேளாண்மை அபிவிருத்தி அமைச்சர்
சுகாதாரத் துறை அமைச்சர்
பதவியில் பதவியேற்பு 2010

இலங்கை சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர்
இலங்கை நாடாளுமன்றம் உறுப்பினர்
(பொலன்னறுவை மாவட்டம் தொகுதி)

தகவல் விக்கிப்பீடியா
Disqus Comments