Saturday, November 22, 2014

மதுரங்குளியில் தும்புத் தொழிற்சாலை உரிமையாளர் தற்கொலை

புத்தளம், மதுரங்குளி பகுதியில் தும்புத் தொழிற்சாலை உரிமையாளர் ஒருவர்  துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இன்று அதிகாலை மூன்று 30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
உயிரிழந்தவருக்கு சொந்தமான அனுமதிபத்திரம் பெற்றுள்ள துப்பாக்கியால் அவரின் வீட்டில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சடலம் சம்பவ இடத்திலேயே காணப்படுவதாகவும் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பொலிஸார் கூறினர்.
எனினும் உயிரிழந்தவர் தனக்குதானே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்கு காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்
சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். (NEWS FIRST)
Disqus Comments