(www.sonakar.com) இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் முஸ்லிம் சமூகத்தினதும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸினதும் (SLMC) நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்துகொள்வதில் எல்லோரும் ஆவல் காட்டுகின்றனர்.
இலங்கையில் முஸ்லிம் பெயர் தாங்கிக் கட்சிகள் பல இருந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களின் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாக முஸ்லிம் அல்லாதவர்களாலும் பார்க்கப்படுகின்றது. அவர்களின் கடந்தகால பிழையான பல முடிவுகளினால் முஸ்லிம்கள் பல சோதனைகளை கடந்த காலங்களில் சந்தித்தாலும் நமக்கு நல்லது செய்வார்கள் என்ற நம்பிக்கையும், இவர்களே செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இன்னும் முஸ்லிம் பாமர மக்கள் மத்தியில் வலுவாக இருப்பதனாலும் SLMC ன் நிலைப்பாடு பற்றி பேசியேயாகவேண்டிய தேவையுள்ளது.
இந்த அரசின் ஆட்சிக்காலத்தில், மேல் மட்ட ஆசீர்வாதத்துடன் முஸ்லிம் சமுகத்துக்கு எதிராக அரங்கேற்றப்பட்டு வந்த, தேர்தலுக்காக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ள அநியாயங்கள், அவமானங்கள் அத்தனைக்கும் ஒரு முடிவு வராதா எனப் பிராத்தித்துக் கொண்டிருந்த மக்களுக்கு அல்லாஹ் கொடுத்த வரம்போல் இன்று இந்தத் தேர்தல் வந்துள்ளது. எனவே முஸ்லிம் சமுகம் இத்தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதைவிட யாரை ஆதரிக்கக் கூடாது என்ற விடயத்தில் இன்று மிகத் தெளிவாக இருக்கின்றது.
குறுநில மன்னர்கள் போல் செயற்ப்படும் அக்கரைபற்று மன்னரோ, வன்னி ராசாவோ, SLMC யோ முஸ்லிம் சமுகம் யாரை ஆதரிக்க வேண்டும் என்று இதன்பின் எந்த முடிவெடுத்தாலும் அது முஸ்லிம் சமுகத்தின் மனதில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை, மிக மிகக் குறைந்த வாக்குச் சிதைவுகளை மட்டுமே இவர்களால் ஏற்படுத்த முடியும். இதுதான் இன்றையக் கள நிலவரமாகும்.
SLMC கொள்கை கெட்டுப்போனதாலும், சமூக உணர்வு விட்டுப்போனதாலும் ஆளும் கட்சியில் வாழப் பழகிப்போனதாலும், எதைச் செய்வது என்ற தெளிவில்லாமலும்,முடிவெடுக்கத் துணிவில்லாமலும் திண்டாட்ட நிலையில் தள்ளாடுகின்றது. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
மஹிந்தவை விட்டு வெளியேறி பின் மஹிந்த மீண்டும் வென்றுவிட்டால், தன் எதிர்காலம் சூனியமாகிவிடும் என்ற பயம் ஒரு பக்கம், அரசை விட்டு வெளியேறாவிட்டால் மக்கள் எம்மை விட்டு வெளியேறிவிடுவார்கள் என்ற பயம் மறுபக்கம் என SLMC அல்லாடிக் கொண்டிருக்கின்றது.

கட்சியின் உள்ளகத் தகவல்படி,SLMC யினர் முத்திசையில் நின்று கொண்டிருக்கின்றனர். தலைவர் எத்திசையில் போனாலும் மற்றவர்கள் மத்திசையில் போகும் நிலை தான் தெரிகின்றது. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை யார் எத்திசையில் போனாலும் முஸ்லிம் சமுகம் தான் எத்திசையில் போக வேண்டும் என்ற விடயத்தில் மிகத் தெளிவாக இருக்கின்றது.
மதில்மேல் பூனையாக இருக்கும் SLMC என்ன செய்யலாம் ? பேசாமல் எதிர்கட்சிகளின் கூட்டணியுடன் இணைந்து மக்கள் போக்கில் போய், ஒரு அரசியல் மாற்றத்துக்கு துனை நின்றவர்கள் என்ற பெயரையும் புகழையும் பெறுவதுடன் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தனது பேரம் பேசும் சக்தியை பலப்படுத்தலாம்.
அல்லது அரசை விட்டு விலகி யாருடனும் சேராமல் மக்கள் தீர்ப்பளிக்கட்டும், நாங்கள் இத்தேர்தலில் மெளனப் போராளிகளாக இருப்போம் என்று முடிவெடுக்கலாம்.மக்கள் நிச்சயம் எதிர்கட்சிக்கே வாக்களிப்பர். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் விருப்புகளுக்கு வாக்களிக்க வழிவிட்டதாக அமையும்.
இதை விடுத்து, அரசுடன் இருந்தால் நிறைய பணம் கிடைக்கும், சில பதவிப் பிச்சைகளும் கிடைக்கும், மக்களை ஏமாற்ற புதிதாக நாலு அபிவிருத்திக்கு நிதி கிடைக்கும்,ஏன் கிழக்கு முதலமைச்சர், கல்முனை கரையோர மாவட்டம் கூடக் கிடைக்கலாம்.
இதற்காக மக்களிடம் எதைச்சொல்லியாவது வாக்குப்பிச்சை கேட்டு மீண்டும் மஹிந்தவை ஆட்சிபீடம் ஏற்ற பாடுபட வேண்டும். இது அடுத்த 8 வருடத்துக்கு முஸ்லிம் சமுகத்தை அடிமைகளாய் எழுதிக்கொடுக்க எடுக்கும் முயற்சியாகும். தோற்றுப்போவோம் எனப்பயந்து அநியாயக்கரனை எதிர்க்கத் தயங்குபவன் கோழை, இது இஸ்லாமியனின் அகராதியில் இருக்கக்கூடாத பண்புகளாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் கடந்த காலத்தில் எடுத்த பெரும்பாலான முடிவுகள் முஸ்லிம் சமூகத்தை விடுத்து கட்சியை காப்பாற்றும் நோக்கில் எடுத்த முடிவுகளாகும். இது அதன் தலைவரே ஒத்துக்கொண்ட விடயமாகும். முஸ்லிம் சமுகத்தின் கோவணத்தை பறிகொடுத்து தன் தலைக்கு தலைப்பாகை கட்டத் துடிக்கும் சுயநல அரசியல்வாதிகளைப் பாதுகாக்கும் தீர்மானங்களை இனியும் எடுக்காமல் சமூகத்தைக் காக்கும் தீர்மானங்களை அதன் தலைமை எடுக்க வேண்டும். அல்லது தொடர்ந்து பிழையான முடிவுகளை எடுக்கும் தலைவரை வெளியேற்றும் போராட்டத்தை அதன் போராளிகள் உள்ளிருந்தே செய்ய வேண்டும்.
இந்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக SLMC எந்த முடிவை எடுத்தாலும் அது அக்கட்சிக்கு சிக்கலானதாகவும், பக்கவிளைவுகளை ஏற்படுதக்கூடியதாகவுமே இருக்கும். இது தவிர்க்க முடியாதது. உரிமை அரசியலில் இருந்து சலுகை அரசியலை நோக்கி தன் திசையை மாற்றியதால்
சந்திக்கும் மோசமான விளைவுகளில் இதுவும் ஒன்று. அனுபவித்துத்தான் ஆகவேண்டும். எதிர்காலத்தையாவது ஒழுங்காகத் திட்டமிடல் வேண்டும்.
SLMC க்கு மட்டுமே வாக்களித்துப் பழகிய கை SLMC சொல்கின்றது என்பதற்காக மீண்டும் சால்வைக்கு வாக்களிக்கும் என்று நம்பினால் அது SLMC எடுக்கும் முட்டாள்தனமான முடிவாகும். தற்கொலை முயற்சியாகும்.
கடைசியாக, ஒரு ஆட்சி மாற்றத்துக்கு நாம் முயற்சிக்க வேண்டும். அதேநேரம், ஒரு ஆட்சி மாற்றத்தினால், எமது வாழ்வில் பாலாறு, தேனாறு ஓடும், எம் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்துவிடும் என்று நம்பத் தேவையில்லை. ஆனால் எமது இரத்தாறு ஓடுவதை தற்காலிகமாவது தடுத்து நிறுத்தலாம், மேலெழுந்துவரும் சிங்கள இனவாதத்துக்கான உடனடி தடுப்பு விசை
(SPEED BRAKER)ஒன்று போடலாம், நாம் எழுந்து நிற்பதற்கும் சுதாகரித்துக் கொள்வதற்குமான ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தலாம். அவ்வளவுதான்.
இது ஒரு அரசில் மாற்றத்துக்காக எம் பேனாக்கள் உரக்கப் பேச வேண்டிய நேரம், உங்கள் பேனாக்களையும் பேசவிடுங்கள்.
- அபூ இமான் ஸஹ்வி