Monday, January 26, 2015

2 BSS காவிகளுக்குப் பிடியாணை, ஞானசாரவினால் நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பொலி

குர்ஆனை நிந்தித்தமை மற்றும் நிப்போன் ஹோட்டலில் ஊடகவியலாளர் மாநாட்டை குழப்பியமை தொடர்பில் பொதுபலசேனா மீது தொடரப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 இவ்வழக்கு விசாரைணக்கு பழைய கெப் வாகனம் ஒன்றில் வருகை தந்த ஞானசார நீதிமன்றத்திற்கு ஆஜராகிருந்தார்.

முஸ்லிம் தரப்பில் சிராஸ் நூர்த்தின் மற்றும் மைத்திரி குணரத்தின ஆகிய சட்டத்தரணிகள் சமுகமளித்திருந்தனர்.

இதன்போது ஆட்சிமாற்றத்திற்கு உதவிய ஞானசார தேரருக்கு மிகவும் குறைந்த பட்ச தண்டனை வழங்குமாறு சட்டத்தரணி சிராஸ் நூர்த்தின் குறிப்பிட்ட போது நீதிமன்றத்தில் பலத்த சிரிப்பொலி எழுந்தது

 இவ்வழக்கை விசாரித்த நீதவான் cctv கமராவை பரிசோதனை செய்யுமாறு கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு வேண்டிக்கொண்டதுடன் எதிர்வரும் மார்ச் மாதம் 02ம் திகதிக்கு முன்னர் இச் சம்பவம் தொடர்பில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கு விசாரணைக்கு சமுகளிக்காத 02 பொதுபலசேனா பிக்குகளை கைது செய்யுமாறு
நீதிபதி உத்தரவிட்டார்.
Disqus Comments