Monday, February 9, 2015

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இனி இரவு 10 மணிவரை O.P.D. திறக்கப்படும்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு,(ஓ.பி.டீ)  எதிர்வரும் 15ஆம் திகதி தொடக்கம் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கும் என வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

வெளிநோயாளர் பிரிவு, தற்போது இரவு 8.00 மணிவரை மட்டுமே இயங்குகின்றது.


நாட்டில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் வெளிநோயாளர் பிரிவுகளை 24 மணிநேரமும் இயக்குவதற்கான முன்மொழிவு, கடந்த 29ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு-செலவுத்திட்டத்தின் போது நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Disqus Comments