தனக்கு புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கும் எண்ணம் எதுவும் இல்லையெனவும் தான் தொடர்ந்தும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினராகவே அரசியலில் ஈடுபட விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச.
பொதுத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை மீண்டும் பிரதான அரசியலுக்குள் தக்க வைத்துக்கொள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளி கட்சிகள் சில முயன்று வரும் நிலையில் நேற்றைய தினம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முக்கிய பிரமுகர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார் மஹிந்த ராஜபக்ச.
இதனடிப்படையில் தனக்கு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டாலும் அதைத் தான் ஏற்றுக்கொள்ளத் தயார் என மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதுடன் தான் வேறு ஒரு கட்சியை ஒருபோதும் உருவாக்கப்போவதில்லையென தெரிவித்துள்ளார்.
எனினும் மஹிந்த ராஜபக்சவுடன் இணைந்து இயங்க முடியாது என சந்திரிக்கா பண்டாரநாயக்க கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
