ஆறறிவு படைத்த மனிதன் தனது அன்றாட கடமைகளை செய்வதற்கு ஏனையவர்களின் உதவியை எதிர்பார்க்கும் வேளையில் ஐந்தறிவு கொண்ட நாய் ஒன்று தனது வேலைகளை தானே செய்வதோடு எஜமானியின் பல வேலைகளுக்கும் உதவியாக இருந்து வருகிறன்றமை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இங்கிலாந்தில் உள்ள ஸ்டாபோர்ட்ஷயர் பகுதியில் வசிக்கும் 56 வயதான ஜேனட் பர்ட்டன் என்று பெண் வளர்க்கும் ரூபர்ட் என்று பெயரிட்ட செல்ல நாய் ஒன்றை இவ்வாறு அதிசயிக்கும் வகையில் பல வேலைகளை செய்து வருகின்றது.
கெமராக்களில் புகைப்படமெடுக்கும் போது ரூபர்ட்டுக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. 10 மாத குட்டியாக இருந்த போதும் புகைப்படமெடுப்பது என்றால் துள்ளிக்குதித்து ஓடிவரும் என நாயின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். தற்போது 2.5 வயது நிரம்பியுள்ள குறித்த நாய், டாக்டர், டென்னிஸ் வீரர் என பல வடிவங்களில் புகைப்படங்களை எடுத்துள்ளமை அனைவரையும் கவர்ந்துள்ளது.
இதே போன்று உடைகயை அயர்ன் பண்ணுவது, கார் துடைப்பது, எஜமானரின் வீட்டுக்கு முன் படர்ந்திருக்கும் பனிக்குவியலை அகற்றுவது, காலையில் பத்திரிகை படிப்பது என பல வகைகளில் ரூபர்ட் புத்திசாலியாக இருப்பது மிகுந்த ஆச்சர்யத்தை அளிக்கிறது. ரூபர்ட்டின் புத்திசாலித்தனம் குறித்து ஜேனட் கூறுகையில், நான் என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், அதை பார்க்கும் ரூபர்ட், தனது இரு கால்களை மேலே தூக்கி வைத்து அதனை உற்று கவனிக்கும். அதன் முகபாவனைகளை பார்க்கும் போது, நான் செய்யும் வேலைகளை உன்னிப்பாக கவனித்து கொண்டிருக்கும். பின்பு அதுவும் அவ்வேளையை செய்யும். அந்த அளவுக்கு புத்திக்கூர்மை உள்ளது என்றார்.
அதன் உற்சாகமான செயல்களை புகைப்படம் எடுத்து, அதை நாளிதழில் வெளியிட்டபோது பலரும் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து கடிதம் அனுப்பினர். இதையடுத்து ரூபர்ட்டுக்காகவே பிரத்யேகமாக பேஸ்புக் இணையத்தள பக்கத்தை தொடங்கினோம். அதில் அதன் புகைப்படங்களை பார்த்த அமெரிக்கர் ஒருவர், மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தாய், ரூபர்ட்டின் புகைப்படத்தை பார்த்தவுடன் மகிழ்ச்சியில் திளைப்பதாக கூறியது நெஞ்சை தொடுவதாக இருந்தது என்று ஜேனட் கூறியுள்ளார்.
ஹவாய், தென்னாபிரிக்கா, அயர்லாந்து, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் உள்ள ரூபர்ட்டின் ரசிகர்கள், தங்களது அன்பை தெரிவிக்கும் விதமாக அதன் புகைப்படங்களை கொண்டு தயாரிக்கப்பட்ட நாட்காட்டிகளை வீடுகளுக்கு வாங்கி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.











