Monday, February 9, 2015

பங்களாதேஷில் பெற்றோல் குண்டு தாக்குதல்; 9 பேர் பலி


 பங்­க­ளா­தேஷில் பஸ்­ஸொன்றின் மீதும் டிரக் வண்­டி­யொன்றின் மீதும் பெற்றோல் குண்­டு­களை வீசி மேற்­கொள்­ளப்­பட்ட தாக்­கு­தல்­களில் குறைந்­தது 9 பேர் பலி­யா­ன­துடன் 30 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக அந்­நாட்டு பொலிஸார் தெரி­வித்­தனர்.

 கடந்த மாதம் அர­சாங்க எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு இது­வரை இடம்­பெற்ற தாக்­கு­தல்­களில் 70 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­கி­யுள்­ளனர்.
கடந்த வருடம் இடம்­பெற்ற சர்ச்­சைக்­கு­ரிய தேர்­தலின் ஆண்டு தினத்­தை­யொட்டி பொது பகிஷ்­க­ரிப்புப் போராட்­ட­மொன்­றுக்கு எதிர்க்­கட்­சி­யான பங்­க­ளாதேஷ் தேசிய கட்சி அழைப்பு விடுத்­தி­ருந்­தது.
அந்தத் தேர்­தலை பங்­க­ளாதேஷ் தேசிய கட்சி பகிஷ்­க­ரிப்புச் செய்­தி­ருந்­தது.கயி­பண்­டா­வா­லி­ருந்து டாக்­காவை நோக்கிச் சென்ற பஸ் மீது வெள்­ளிக்­கி­ழமை இரவு நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டு தாக்­கு­தலில் ஆறு பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
அதே­ச­மயம் பரிஸல் மாவட்­டத்தில் டிரக் வண்­டி­யொன்றை இலக்கு வைத்து சனிக்­கி­ழமை நடத்­தப்­பட்ட பெற்றோல் குண்டுத் தாக்­கு­தலில் 3 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
இந்த வன்முறைகளுக்கு எதிர்க்கட்சித் தலைவி காலிதா ஸியாவே காரணம் என குற்றஞ்சாட்டப்படுகிறது.

Disqus Comments