பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வு உள்ளிட்ட பல்வேறு நலன்களுக்கும்
வலுசேர்க்கும் கூட்டு ஒப்பந்தம் எதிர்வரும் மார்ச் மாதம் 31ம் திகதி
முடிவடைகின்றது.
உரிய காலத்தில் மக்களின் எதிர்கால மற்றும் அதிகரித்த செலவீனத்தை ஈடுசெய்யும் வகையில் தொழிலாளர்களுக்கு அதிகரித்த சம்பளமாக இடைக்கால வரவு செலவுத்திட்டத்தில் சிபார்சு செய்யப்பட்டுள்ள தொகையையும் உள்ளடக்கி மொத்த சம்பளமாக நாளாந்தம் 1000/= ரூபாவை தொழிலாளர்களுக்குப் பெற்றுக்கொடுக்க ஏனைய கூட்டு ஒப்பந்த தொழிற்சங்கப் பங்குத்தார்களுடன் பேசிக் கலந்து ஆலோசிப்பதற்கு இ.தொ.கா. தீர்மானித்துள்ளது.
பெருந்தோட்டத்துறை மக்களின் அனைத்துப் பொருளாதாரத் தேவைகளையும் நிவர்த்தி செய்யும் பொருட்டே காலங்காலமாக வேதன உயர்வினை இ.தொ.கா. பெற்றுக்கொடுத்து வந்துள்ளது.
அந்த வகையில் தற்போதைய இ.தொ.கா.வின் தீர்க்கமான முடிவிற்கு கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு வருகின்ற தொழிற்சங்கங்களுடன் விரைவில் கலந்துரையாட இ.தொ.கா. ஏற்பாடு செய்துள்ளதென இ.தொ.கா. தலைவர் முத்து சிவலிங்கம் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
முன்னர் செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் தோட்டத் தொழிலாளர்கள் நாளொன்றுக்கு சுமார் 650 ரூபா சம்பளம் பெறுகின்றனர்.