கோத்தபாய தலைமையின் கீழான நகர அதிகார சபையினால் அபகரிக்கப்பட்ட தமது உரிமைகளை மீளக் கோரி புறக்கோட்டை சிறு வர்த்தக நிலைய உரிமையாளர்கள் இன்று அமைச்சர் ரவுப் ஹகீமின் அமைச்சு அமைந்துள்ள செத்சிரிபாய முன்னால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன் போது, புதிய அமைச்சர் ரவுப் ஹக்கீமே’ பிரதமரே, ஜனாதிபதியே நகர அபிவிருத்தியின் புதிய தலைவரே, எங்களது பிரச்சினைகளைத் தீருங்கள் என புறக்கோட்டை நகர் பௌத்த குரு தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரியிருந்தனர்.
கொழும்பு புறக்கோட்டை தணியார் பஸ் நிலையத்திற்கு அருகில் வருடக்கணக்கில் சொந்தமாக கடைகளை வைத்திருந்தோம். அதற்கான உறுதிப்பத்திரமும் எங்களிடம் உண்டு. இதுவரை எங்களுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் எவ்வித கடைகளோ அல்லது எங்களது ஜீவனோபாயத்தைக் கொண்டு செலலக் கூடிய வழிவகைகளையோ அதிகாரிகள் செய்யவில்லை. எமது வர்த்தக நிலையங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையின் கொழும்பை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் இரவோடு இரவாக புல்டோர்சர் மெசின்களால் அகற்றப்பட்டன. அன்று நீதி நியாயம் கேட்டு நீதிமன்றம் சென்றோம். ஆனால் எங்களது குடும்பங்களுக்கு ஜீவனோபாயமின்றி மிகவும் கஸ்டப்படுகின்றோம். என ஆர்ப்பாட்டக் காரர்கள் கூறினார்கள்.
இதனால் செத்சிரிபாய முன் வாயல் கதவுகள் திறக்க முடியாமல் பொலிசாரினால் இழுத்து மூடப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் முன் கதவின் கண்னாடியைத் தகர்த்தனர். உடனே நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் அவர்களைச் சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சர் ரவுப் ஹக்கீம் வெளிநாடு சென்றுள்ளார். அவர் நாடுவந்ததும் அவருடன் கலந்துரையாடி உங்கள் எல்லோரையும் அழைத்து கலந்து ஆலோசித்து தீர்வைப் பெற்றுத் தருவதாக நகர அபிவிருத்தியின் தலைவர் ரன்ஜித் உறுதியளித்தார். இவ்வுறுதி மொழியுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள்
கலைந்து சென்றனர்.
- அஸ்ரப் ஏ சமத்