அரசியலுக்குள் வரும் அனைவரும் தம்மால் தலைமைத்துவத்தை வழங்க முடியும் எனும் எதிர்பார்ப்புடனேயே வருகிறார்கள் என தெரிவித்துள்ள எதிர்க் கட்சித் தலைவர் நிமல் சிறிபால டிசில்வா அவ்வாறான வாய்ப்பு எல்லோருக்கும் கிடைப்பதில்லையாயியும் அரசியலில் உயர் நிலைக்குப் போக வேண்டும் எனும் எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது, அதனை மறைப்பதில் பிரயோசனமில்லையென தெரிவித்துள்ளார்.
ஹிரு தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டபோதே இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ள அவர், மஹிந்த அரசில் பிரதமராகும் தகுதி தனக்கிருந்ததாகவும் தற்போதும் நாட்டின் பிரதமராகும் தகுதி தனக்கிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஸ்ரீலசுகட்சிக்குள் பிரதமராகும் தகுதி அவருக்கு இருக்கிறதா என வினவப்பட்டபோதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளதுடன் ஒவ்வொரு அரசியல் வாதியும் உயர் நிலைகளை அடைய வேண்டும் எனும் எதிர்பார்ப்புடன் தான் அரசியலில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - சோனகா்.கொம்.