Friday, February 27, 2015

மைத்திரியின் அரசுக்கு எதிராக இயங்குகிறதா பொலிஸ்? ராஜிதவுக்கு சந்தேகம்

 ஊழல், மோசடி துஷ்பிரயோகங்களில் பெரும் தலைகளின் பெயர்கள் ஏற்கனவே பட்டியலிடப்பட்டிருக்கும் நிலையில் சிறு குற்றங்கள் புரிந்தோர் மற்றும் வீரவன்சவின் மனைவி போன்றோரைப் பிடித்து வைத்து ஊதிப் பெருப்பித்து அரசாங்கத்துக்கு எதிராக மக்கள் அபிப்பிராயத்தைத் திருப்பும் நடவடிக்கைகளில் பொலிஸ் திணைக்களம் ஈடுபடுகிறதா என சந்தேகம் வெளியிட்டுள்ளார் அமைச்சர் ராஜித சேனாரத்ன.

அமைச்சரவை தீர்மானங்கள் குறித்து அறிவிக்க ஊடகவியலாளர்களை இன்று சந்தித்த வேளியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ள அவர் இது குறித்து மேலதிக தேடல்கள் அவசியமாகியுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கையில் இறங்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார். குறித்த விவகாரங்கள் தொடர்பில் மக்களிடம் இருக்கும் அதே கேள்விகளே தன்னிடத்திலும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், வெலே சுதா போன்ற பெருந்தலைகள் இருக்க சுதர்மன் , சஷி வீரவன்ச போன்றவர்களை கைது செய்து பொலிசார் செய்யும் நடவடிக்கைகள் சந்தேகத்துக்கிடமாகவே இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - சோனகா்.கொம்.
Disqus Comments