தேவையில்லாமல் மக்களை ஒன்று திரட்டி நீதிமன்றத்தில் அரசியல் லாபம் தேட முயற்சிக்க வேண்டாம் என கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய நேற்று திறந்த நீதிமன்றத்தில் விமல் வீரவங்ச தரப்பினருக்கு எச்சரிக்கை விடுத்தார்.
நேற்று முன்தினம் முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஸீ வீரவங்சவுக்கு எதிரான வழக்கு விசாரணையினைப் பார்ப்பதற்காக அரசியல்வாதிகள், அரசியல் ஆதரவாளர்கள் என அதிகமானோர் ஒன்று கூடியிருந்தனர். வழக்கு முடிவடைந்து நீதிமன்ற வளாகத்தினுள் விமல் வீரவங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்து தனது ஆரதவாளர்களுக்கு உற்சாகமூட்டினார்.
நேற்று விமல்வீரவங்சவின் சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான சட்டத்தரணி விமல் வீரவங்சவின் மனைவியை இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக்குமாறு கோரியிருந்தார். இதன் போதே நீதவானால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது.