Thursday, February 12, 2015

நாய்களுக்கு 100 விருந்தினர்கள் முன்பாக கோலாகல திருமணம்

இரு நாய்­க­ளுக்கு சுமார் 100 விருந்­தி­னர்கள் முன்­பாக கோலா­க­ல­மாக திரு­மணம் செய்து வைக்­கப்­பட்ட சம்­பவம் இந்­தோ­னே­சி­யாவில் ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்பெற்­றுள்­ளது.
பல்ஸ் என்ற ஆண் நாய்க்கும் யிப்பா என்ற பெண் நாய்க்கும் மனடோ நக­ரி­லுள்ள மெகா டிரேட் நிலை­யத்தில் திரு­மணம் செய்துவைக்­கப்­பட்­டது.
மண­ம­க­ளான யிப்பா வெள்ளை நிற திரு­மண ஆடையையும் மலர்­க­ளாலான கிரீ­டத்தையும் அணிந்­தி­ருந்த அதே­ச­மயம், மண­ம­க­னான பல்ஸ் திரு­மண மேலா­டையையும் மூக்குக் கண்­ணா­டியையும் அணிந்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்த திரு­ம­ணத்தின் போது நாய்­க­ளுக்­காக விசே­ட­மாக வடிவமைக்கப்பட்ட திருமண கேக் வெட்டப்பட்டு பரிமாறப்பட்டது.
Disqus Comments