Saturday, February 14, 2015

ஒரு நாள் போட்டிகளில் அதிகூடிய ஓட்டங்கள் 2ம் இடத்தைப் பிடித்தார் - குமார் சங்ககார

ஒரு நாள் கிரிக்கட் போட்டித் தொடர்களில் கூடிய ஓட்டங்களைப் பெற்ற துடுப்பாட்ட வீரர்கள் வரிசையில் இந்திய கிரிக்கட் வீரர் சச்சின் டென்டுல்கருக்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார் குமார சங்கக்கார.

426 போட்டிகளில் பங்கெடுத்து 18426 ஓட்டங்களுடன் சச்சின் டென்டுல்கர் முதலாவது இடத்திலும் 398 போட்டிகளில் பங்கெடுத்து 13732 ஓட்டங்களைப் பெற்று (இன்றைய ஆட்டம் உட்பட) சங்கக்கார இரண்டாவது இடத்திலும் தற்போதைய நிரல் படுத்தலின் படி காணப்படுகின்றனர். அதற்கடுத்த நிலையில் தற்போது போட்டிகளில் பங்கேற்பவர்கள் இல்லாத காரணத்தால் உலகக் கோப்பைச் சுற்றுப் போட்டியின் இறுதியில் சங்கக்காரவினால் இந்த நிலையைத் தக்க வைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேதிலக தகவல்களை கீழ்வரும் படங்கள் மூலம் அறிந்து கொள்ள முடியும். 

Disqus Comments