அவுஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் முதலாவது போட்டியில் நியூவிலாந்து அணி 98 ஓட்டங்களால் இலங்கை அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.
நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று சனிக்கிழமை(14) ஆரம்மபமான முதலாவது போட்டியில் இலங்கை-நியூசிலாந்து அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது. முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஒவரில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 331 ஓட்டங்களை குவித்தது.
நியூசிலாந்து அணியின் சார்பில் என்டர்சன் 75, மெக்கல்லம் 65, வில்லியம்சன் 57 ஓட்டங்களை எடுத்தனர். 332 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய இலங்கை அணி, 46.1 ஓவர்களில் 233 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது. -
போட்டியின் சிறப்பாட்டக் காரராக நியூஸிலாந்து அணியின் CJ Anderson (New Zealand) தெரிவு செய்யப்பட்டார்.
