சதாம் உசைனை தூக்கிலிட்ட கயிறு ஏலத்தில் விடப்பட்டதையடுத்து தற்போது வரை 92 கோடியே 96 இலட்சம் ரூபா வரை எட்டியுள்ளதோடு மேலும் ஏலத்தொகை அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
ஈராக் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி சதாம் உசைன் கடந்த 1979ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டுவரை 24 ஆண்டுகள் அந்நாட்டின் ஜனாதிபதியாக இருந்தார். கடந்த 2003ஆம் ஆண்டில் ஈராக் மீது அமெரிக்க இராணுவம் தாக்குதல் நடத்தியது.
பின்னர் பண்ணை வீட்டில் பதுங்கு குழியில் பதுங்கியிருந்த சதாம் உசைனை அமெரிக்க இராணுவம் கைது செய்தது. 3 ஆண்டுகள் விசாரணைக்கு பிறகு 2006 டிசம்பர் 30ஆம் திகதி அவர் தூக்கிலிடப்பட்டார்.
அவரது கழுத்தை இறுக்கிக் கொன்ற தூக்குக் கயிற்றை ஏலத்தில் விட லண்டனில் உள்ள ஒரு பிரபல நிறுவனம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு வெளியானதும் உலகின் பல நாடுகளை சேர்ந்த செல்வந்தர்கள் இந்த ஏலத்தில் பங்கேற்க தொடங்கி விட்டனர்.
