Tuesday, February 10, 2015

தேநீர் விஷமானதில் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

நீர்கொழும்பு பிரதேசத்தில் யூரியா உரம் கலந்த தேநீரை அருந்திய 27 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள சமூக நல மத்திய நிலையமொன்றில் பயிற்சி பெற்றுவந்த மாணவர்களுக்கு வழங்கப்பட்ட தேநீரில் தவறுதலாக சீனிக்கு பதிலாக யூரியா உரம் கலக்கப்பட்டதாலேயே மாணவர்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Disqus Comments