மஹிந்த ராஜபக்ச போன்ற சிறந்த நிர்வாக தலைவர் இருந்ததில்லையெனினும் அவரைச் சுற்றியிருந்த அரைகுறை பண்டிதர்களும் பசில் ராஜபக்சவின் அரைப்படிப்பும் சேர்ந்து தான் மஹிந்த ராஜபக்சவை வீட்டுக்கு அனுப்பியது என தெரிவித்துள்ளார் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்தகமகே.
மஹிந்த ராஜபக்வின் அரசியல் வீழ்ச்சிக்கு முழுக் காரணமும் பொறுப்பும் இவர்களையே சாரும் எனவும் தெரிவித்துள்ள அவர், மஹிந்த சுதந்திரமாக இயங்குவதற்கு அவரது குடும்ப உறுப்பினர்கள் பெரும் தடையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.