Wednesday, February 11, 2015

திஸ்ஸவின் போலி ஆவணம்: அநுர, தயாசிறியிடம் விசாரணை

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும்  முன்னாள் சுகாதார அமைச்சருமான  திஸ்ஸ அத்தநாயக்க, பங்குபற்றிய ஊடக சந்திப்பு குறித்து வடமேல் மாகாண  முதலமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான அனுரபிரியதர்சன யாபா ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

பொது வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கும் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் இரகசிய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாக திஸ்ஸ அத்தநாயக்க குற்றம் சுமத்தியிருந்தார். இது தொடர்பிலான ஆவணங்களையும் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகச் சந்திப்பில் காண்பித்தார். அந்த ஊடகச் சந்திப்பில் தயாசிறி ஜயசேகரவும், அனுரபிரியதசர்ன யாபாவும் பங்கேற்றிருந்தனர். 
Disqus Comments