Tuesday, February 10, 2015

அரசாங்க ஊழியர்களுக்கு இம்மாத அதிகரிப்பு 2 ஆயிரம் ரூபா மாத்திரமே: ராஜித சேனாரத்ன

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இடைக்கால வரவு செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அரச ஊழி­யர்­களின் பெப்­ர­வரி மாத சம்பளத்தில் 5000 ரூபா சம்­பள அதி­க­ரிப்பு வழங்­கப்­படும் என அறி­விக்­கப்­பட்­டாலும் அந்த 5000 ரூபாவில் கடந்த அர­சாங்­கத்தின் ஊடாக அதி­க­ரிக்­கப்­பட்ட தொகை கழிக்­கப்­பட்டு எஞ்சிய தொகையே பெப்­ர­வரி மாத சம்­பளத்தில் இணைக்­கப்­படும் என்று அமைச்­ச­ரவை பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.


எதிர்­வரும் ஜூன் மாதத்தில் 5000 ரூபா முழு­மை­யாக சம்­பள அதி­க­ரிப்­பாக வழங்­கப்­படும் என்றும் அவர் குறிப்­பிட்டார். அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்­டி­லே­லேயே அவர் இந்த விட­யங்­களை குறிப்­பிட்டார்.

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்; ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் அர­சாங்­கத்­தினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள இடைக்­கால வரவு செல­வுத்­திட்­டத்தின் ஊடாக அரச ஊழி­யர்­களின் சம்­பளம் 10000 ரூபா­வினால் அதி­க­ரிக்­கப்­படும் என்று அறி­வித்­தது. அதில் 5000 ரூபா பெப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்தும் ஏனைய 5000 ரூபா ஜூன் மாதத்­தி­லி­ருந்தும் வழங்­கப்­படும் என்றும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­நி­லையில் கடந்த மஹிந்த ராஜ­ப­க் ஷவின் அர­சாங்கம் 2015 ஆம் ஆண்­டுக்­காக முன்­வைத்த வரவு செலவுத் திட்­டத்தின் ஊடாக 3000 ரூபாவை அண்­மித்த தொகையை சம்­பள அதி­க­ரிப்­பாக வழங்­கி­யது. அந்த சம்­பள அதி­க­ரிப்பு வெவ்­வேறு மட்­டங்­களில் செய்­யப்பட்டிருந்­தது.

இந் ­நி­லையில் பெப்­ர­வரி மாதத்­தி­லி­ருந்து புதிய அர­சாங்கம் வழங்­க­வுள்ள 5000 ரூபா அதி­க­ரிப்­பா­னது கடந்த அர­சாங்­கத்தின் வரவு – செல­வுத்­திட்டம் ஊடாக அதி­க­ரிக்­கப்­பட்ட தொகையை கழித்­து­விட்டே வழங்­கப்­படும். அந்த 5000 ரூபா­வி­லி­ருந்து முன்­னைய அர­சாங்கம் அரச ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கிய அதி­க­ரிப்பை கழித்­து­விட்டு எஞ்­சிய தொகை வழங்­கப்­படும்.

ஜூன் மாதத்தில் 5000 ரூபா வழங்கப்படும். இந்த சம்பள அதிகரிப்பானது அடிப்படை சம்பளத்திலேயே இணைக்கப்படும். இதனை புரிந்துகொள்ள வேண்டும். நாங்கள் 40 வீதத்துக்கும் அதிகமாக சம்பள அதிகரிப்பை செய்துள்ளோம் என்றார்.

(நன்றி: வீரகேசரி)
Disqus Comments