பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் க்னிஷிகா ஹிரிமுரேகம, தன்னுடைய பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
அவர், தனது இராஜினாமா கடிதத்தை கடந்த 10ஆம் திகதி கையளித்துள்ள போதிலும் அவரது வெற்றிடத்துக்கு இதுவரையிலும் யாரும் நியமிக்கப்படவில்லை என உயர்க்கல்வி இராஜாங்க அமைச்சின் செயலாளர் பீ.ரனேபுர தெரிவித்தார்.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான பேராசிரியர் க்னிஷிகா ஹிரிமுரேகம, பதவியை இராஜினாமா செய்யவேண்டும் என்று வலியுறுத்தி சகல பல்கலைக்கழகங்களையும் உள்ளடக்கி இன்று மேற்கொள்ளப்படவிருந்த ஒருநாள் வேலைநிறுத்தம் கைவிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பேராசிரியர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் பிரபாத் ஜயசிங்க தெரிவித்தார்.