Thursday, February 26, 2015

மஹிந்தவின் பாதுகாப்பு பிரிவில் மகன் யோசித்த ராஜபக்ஷ இணைந்தார்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது புதல்வரும் கடற்படை அதிகாரியுமான யோஷித்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவில் இணைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பு அணியில் தன்னை இணைக்குமாறு யோஷித்த ராஜபக்ஷ இதற்கு முன்னர் கோரிக்கை விடுத்திருந்தார். 

அதன்படி, பெப்ரவரி 12ம் திகதி தொடக்கம் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. 

யோஷித்த ராஜபக்ஷ கடற்டையில் இணைந்தமை மற்றும் பதவி உயர்வு வழங்கப்பட்ட விதம் குறித்து விசாரணை நடத்துமாறு ஜே.வி.பி பாதுகாப்பு செயலாளரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Disqus Comments