சீனாவுடனான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவென இலங்கை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சீனா சென்றுள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் எதிர்வரும் மார்ச் மாதமளவில் சீனா செல்லவுள்ளார்.
வெளிவிவகார அமைச்சராக பொறுப்பேற்று இரண்டு மாதங்களுக்குள் மங்கள சமரவீர, பிரித்தானியா, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு விஜயம் செய்து அந்த நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
