எதிர்கட்சியின் சில உறுப்பினர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் வெளிநாட்டு ஊடகமொன்றிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவை எதிர்கட்சி பிரதமர் வேட்பாளராக களமிறக்க சில தரப்பினர் முயற்சித்து வருகின்றனர். எனினும் ராஜபக்ஷவை தனக்கு நன்கு தெரியும் என்றும் அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட வர மாட்டார் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும் எதிர்கட்சி உறுப்பினர்கள் குழுவொன்று விரைவில் மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுமாறு அழைப்பு விடுக்கும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
´மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் தேர்தலில் போட்டியிட வைக்க முடிந்தளவு முயற்சி செய்வோம். மஹிந்தவை விரும்பும் மக்கள் பெருமளவில் உள்ளனர். அதனால் அவர் வெற்றிபெற வாய்ப்பு உண்டு´ என வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.
மஹிந்தவை ஆதரித்து நுகேகொடயில் நடைபெற்ற கூட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷ விசேட செய்தி ஒன்றை அனுப்பி அந்த கூட்டத்தில் உள்ளவர்களின் கரங்களை பற்றிப் பிடித்துக் கொள்வதாகவும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்பட தயாரில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
