Thursday, February 26, 2015

வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

டாகா: வங்கதேச முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவை கைது செய்ய வாரன்ட் பிறப்பித்து வங்கதேச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. ஜியா ஆதரவற்றோர் அறக்கட்டளை மற்றும் ஜியா சாரிடபிள் டிரஸ்ட் ஆகியவற்றில் நடைபெற்ற ஊழல்கள் தொடர்பாக கலீதா ஜியா, அவரது மகன் தாரிக் ரகுமான் உள்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜியா நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஜியா நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்று அவருடைய வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். இந்த வழக்குகளின் விசாரணைக்கு ஜியாவை ஆஜராகும்படி பலமுறை நோட்டீஸ் அளித்துள்ளோம். ஆனால் அவர் பல்வேறு காரணங்களை கூறி 50க்கும் மேற்பட்ட தடவை நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வருகிறார். இதற்கு மேல் அவகாசம் கொடுக்க முடியாது என்று நீதிபதி தெரிவித்தார். 
Disqus Comments